வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சத்தை கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளில் அவதார்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் தேவைக்கேற்ப உங்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கும். அவதார் அம்சம் வந்தால், இது வாட்ஸ்அப் அழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
வாட்ஸ் அப்பில் ஆக்மென்ட் ரியாலிட்டி
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். WhatsApp அதன் வாடிக்கையாளர்களுக்கு பல புதுப்புது அம்சங்களை வழங்குகிறது. வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பும் அவற்றில் ஒன்று. நீங்கள் அடிக்கடி வாட்ஸ்அப்பில் அழைப்புகளை மேற்கொள்பவர் என்றால் இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது மெட்டா நிறுவனம் ஆக்மென்டட் ரியாலிட்டியை (AR) வாட்ஸ்அப் பிளாட்ஃபார்மில் கொண்டு வருகிறது. இந்த டெக்னாலஜி மூலம் புதிய அவதார்களை உருவாக்கி, வாட்ஸ்அப் வீடியோ கால்களை சிறந்த என்டர்டெயின்மென்டுகளாக மாற்றலாம்.
வேடிக்கையாக இருக்கப்போகும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள்
வாட்ஸ்அப்பின் புதிய மற்றும் வரவிருக்கும் புதுப்பிப்புகளைக் கண்காணிக்கும் ஒரு தளமான WAbetainfo, வீடியோ அழைப்புகளுக்கான AR அம்சத்தை WhatsApp சோதிக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இதில், பல வகையான எபெக்ட்ஸ் மற்றும் பில்டர்கள் அணுகக்கூடியதாக இருக்கும். அழைப்பின் போது, பயனர்கள் வேடிக்கையான பில்டர்களைச் சேர்க்கலாம். இந்த அம்சங்கள் காட்சி அனுபவத்தை மேம்படுத்தவும், வீடியோ சாட்டிங்கை மிகவும் வேடிக்கையாகவும் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் அவதார் எப்போது வரும்?
இதனுடன், அழைப்பின் போது உங்கள் பேக்கிரவுண்டை திருத்தும் திறனையும் WhatsApp மேம்படுத்துகிறது. கான்பரன்ஸ் அல்லது குழு உரையாடல்களுக்கு ஏற்ற கேம்சேஞ்சர் செட்டிங்ஸாகவும் இது இருக்கும். இப்போதைக்கு, இந்த அம்சம் டெஸ்க்டாப் செயலியில் கிடைக்கும் என தெரிகிறது. அதபோல், வாட்ஸ்அப் வீடியோ உரையாடலில் மற்றவர்களுக்கு முகத்தை நீங்கள் காண்பிக்க விரும்பவில்லை என்றால், அந்த நொடியில் நீங்கள் அவதராக மாற்ற முடியும். தற்போது, இந்த AR அம்சங்கள் இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளன, எனவே அதன் வெளியீட்டு தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.