‘பட்டியலின மக்கள் வசிப்பிடங்களை காலனி என அழைக்கக் கூடாது’ – ராஜினாமாவுக்கு முன் கேரள அமைச்சர் கடைசி உத்தரவு

திருவனந்தபுரம்: “கேரளாவில் உள்ள பட்டியலின மக்கள் குடியிருக்கும் இடங்களை இனி காலனி என அழைக்கக் கூடாது” என அமைச்சராக பணியாற்றிய கடைசி நாளில் உத்தரவு பிறப்பித்துள்ளார் கே.ராதாகிருஷ்ணன்.

பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அமைச்சரவையில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தவர் கே.ராதாகிருஷ்ணன். இடுக்கி மாவட்டத்தில் பிறந்த இவர், இளம் வயதில் எம்எல்ஏவாக, அமைச்சராக, சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றியவர். சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து வெற்றிபெற்ற ஒரேயொரு இடதுசாரி கூட்டணி எம்.பி இவர் மட்டுமே. 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரு தொகுதியில் பாஜகவும் வென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.