சம்பவம் 1:
மும்பை வடாலாவில் உள்ள கூட்டுறவு வங்கியில், வத்சலா என்ற பெண் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரின் மனுவை பரிசீலித்த தலைமை நிர்வாக அதிகாரி, அப்பெண்ணின் வீட்டை பார்க்க தானேவுக்கு சென்றார். வீட்டில் வைத்து அப்பெண், வங்கி அதிகாரியுடன் உறவு வைத்துக்கொண்டார் என சொல்லப்படுகிறது. இதன் பின்னர், வங்கி நிர்வாகம் அவருக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கியது. ஆனால் ஒரு மாதம் கழித்து வத்சலா வங்கி அதிகாரியின் மொபைல் நம்பருக்கு அவரின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்பியதோடு, ரூ.8 கோடி கொடுக்கவில்லையெனில் அவற்றை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் வங்கி அதிகாரி ரூ.5 லட்சம் கொடுத்தார். அதனை தொடர்ந்து 2017ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரை அடிக்கடி வங்கி அதிகாரியை மிரட்டி வத்சலா பணம் வாங்கி வந்தார். வங்கி அதிகாரி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கடன் வாங்கியும், வீட்டை விற்றும் 108 தவணையில் ரூ.4.39 கோடியை கொடுத்தார்.
அப்படி இருந்தும் தொடர்ந்து அப்பெண் பணம் கேட்டு மிரட்டிக்கொண்டே இருந்தார். வங்கி அதிகாரியிடம் மேற்கொண்டு பணம் இல்லை. இதையடுத்து வங்கி அதிகாரி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சொன்னபடி பணம் கொடுப்பதாக கூறி வத்சலாவை வங்கி அதிகாரி வரவழைத்தார். அதனை நம்பி வந்தஅவரை போலீஸார் கைது செய்தனர். மிரட்டி பறித்த பணத்தை எதில் முதலீடு செய்திருக்கிறார் என்பது குறித்தும், இதில் அப்பெண் மட்டும் தான் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் 2:
சுப்ரீம் கோர்ட் நீதிபதி போல் பேசி ரூ.1.3 கோடி மோசடி
மற்றொரு சம்பவத்தில், மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராகவ் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தான் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மலேசியாவிற்கு கூரியர் அனுப்பப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அது திரும்ப வந்திருப்பதாகவும், தற்போது அது சுங்கவரித்துறையில் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். மற்றொருவர் போன் செய்து தன்னை சுமித் மிஸ்ரா என்றும், போலீஸ் அதிகாரி என்றும் கூறிக்கொண்டார். நீங்கள் அனுப்பிய பார்சலில் போலி பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டு, போதைப்பொருள் இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால் ராகவ் தான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர், அனில் யாதவ் என்பவர் போன் செய்து தான் சி.பி.ஐ. தலைவர் என்றும், உங்களது பெயரில் சுப்ரீம் கோர்டில் பணமோசடி வழக்கு பதிவாகி இருக்கிறது என்று தெரிவித்ததோடு ஒரு லிங்க் அனுப்பினார். அதனை ராகவ் திறந்த போது அதில் கைது வாரண்ட் இருந்தது. அதோடு சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்று கூறிக்கொண்டு ஒருவர் பேசினார். பணமோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்கவும், விசாரணை முடியும் வரை ரூ.1.3 கோடியை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும் படி கேட்டுக்கொண்டார். ராகவ் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு மர்ம நபர்கள் இணைப்பை துண்டித்துவிட்டனர். உடனே ராகவ் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88