டி20 உலக கோப்பை போட்டியில் ஆன்டிகுவா மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் இறங்கியது. டாஸ் வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங் எடுக்கும் முடிவில் தான் இருந்ததாக தெரிவித்த ரோகித், வங்கதேசம் பவுலிங் எடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறினார். இப்படி பேசிவிட்டு ஓப்பனிங் இறங்கிய அவர், இந்த உலக கோப்பையில் மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் சொதப்பினார். வந்ததுமே அடித்து ஆடி, எதிரணியை நிலைகுலைய செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சில ஷாட்டுகளை கடந்த சில போட்டிகளில் ஆடிய ரோகித் சர்மா சொதப்பினார்.
பெரிய ஸ்கோர் எல்லாம் அடிக்கவில்லை. அதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான இந்தப் போட்டியிலாவது ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குதித்தால் தலைகீழா தான் குதிப்பேன் என மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 11 பந்துகள் ஆடிய ரோகித் சர்மா 1 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். ஷகில் அல்ஹசன் வீசிய அந்த ஓவரில் ஏற்கனவே சிக்சர் ஒன்றை அடித்த நிலையில், அடுத்தடுத்த பந்துகளையும் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்ட வேண்டும் என்றும் ஆடியதால் தேவையில்லாமல் விக்கெட்டை பறி கொடுத்தார் ரோகித்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பார்க்கும்போது ஓப்பனிங் ஆடிய ரோகித் சர்மாவின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக எல்லாம் இல்லை. மற்ற பிளேயர்கள் ஆடுவதால் இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக ஆடும்போது ரோகித் சர்மாவின் ஆடாமல் இருந்தால் அப்போட்டியில் எல்லாம் வெற்றியை நினைத்து பார்க்க முடியாது.
இது ஒருபுறம் இருக்க ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடினார். 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்க, ரிஷப் பன்ட் தன்னுடைய பங்குக்கு 36 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 36 ரன்கள் எடுக்க இந்திய அணி கவுரமான ஸ்கோரை நோக்கி நகரந்தது. எப்படி இருந்தாலும், ரோகித் சர்மாவின் பேட்டிங் படுமோசமாக இருப்பது என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரோகித் – விராட் கோலி ஓப்பனிங் வேண்டாம், அந்த சொக்க தங்கத்தை கொண்டு வாங்க! – ரசிகர்களின் போர்க்குரல்