குவாஹாட்டி: அசாமில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி மாநிலத்தின் காம்ரூப், தமுல்பூர், ஹைலகண்டி உள்ளிட்ட 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளன. மழைகாரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு,சூறாவளி காற்று உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவரை காணவில்லை. ஒட்டுமொத்தமாக 3.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தால் 2 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி மற்றும் பராக் ஆறுகளில் வெள்ளம் காரணமாக நீர் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 100 மீட்பு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகம் செய்ய125 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. மாநிலத்தின் பல்வேறுமாவட்டங்களில் குடியிருப்புப்பகு திகள், கால்நடை கொட்டில்கள், சாலைகள், பாலங்கள் உள் ளிட்டவை சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.