Indian 2: "உங்களுடைய எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க. இந்தியன் தாத்தா வர்றார்!" – சித்தார்த்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இந்தியன் 2′.

1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். ஒருபுறம் ராம் சரணுடன் `Game Changer’ தயாராகிக் கொண்டிருக்க, ஷங்கரின் ‘இந்தியன் 2’ வரும் ஜூலை 12ம் தேதி வெளியாகவிருக்கிறது.

Indian -2: சித்தார்த்

இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள நடிகர் சித்தார்த் இன்று நடந்த ‘இந்தியன் -2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “21 வருஷத்துக்கு முன்னாடி சினிமாவுல நடிக்கிறதுக்கு ஷங்கர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு. அதுக்கு நன்றி. இப்போ கமல் சார் கூட நடிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காரு. அதுக்கும் நன்றி. சின்ன வயசுல இருந்து கமல் சார், கமல் சார்ன்னு சொல்லிதான் நான் வளர்ந்திருக்கேன்.

என்னுடைய முதல் படத்துல இருந்து கமல் சார் என் கூடவேதான் இருக்கார். எட்டாத உயரத்தில இருந்து என்னை வழி நடத்திக் கூட்டிட்டு போகிறார். இப்போ இந்தப் படங்களெல்லாம் இவ்ளோ வசூல் பண்ணுதுனு பேசுறாங்க. இந்தப் படமும் பயங்கரமா வசூல் பண்ணும். என்னுடைய உழைப்பையும் காதலையும் இந்தப் படத்துல சேர்த்திருக்கேன். இந்த கதாபாத்திரத்துல என்ஜாய் பண்ணி நடிச்சுருக்கேன். சின்ன வயசுல இருந்து கமல் சார் படத்தோட எல்லா டிரெய்லரும் பார்த்திருக்கேன். அந்த டிரெய்லர்ல என்னைப் பார்க்க முடிஞ்சது மறக்க முடியாத தருணம்.

‘இந்தியன் -2’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு

ஷங்கர் சாருக்கும் கமல் சாரை ரொம்ப பிடிக்கும். லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் போட்ட நம்பிக்கைக்கும் முதலீடுக்கும் நிறைய அற்புதங்கள் கிடைக்கும். ஜூலை 12-ம் தேதி தாத்தா வர்றாரு கதறவிடப் போறாரு… உங்களுடைய எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க. ஷங்கர் சார் அவரோட மேஜிக்கை செதுக்கியிருக்காரு” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.