பட்ஜெட் விலையில் OnePlus Nord CE4 Lite… எங்கு, எப்படி தள்ளுபடியில் வாங்குவது?

OnePlus Nord CE4 Lite 5G: OnePlus மொபைல்கள் இந்திய இளசுகளின் முக்கிய சாய்ஸாக இருந்து வருகிறது. கேமரா, பிராஸஸர் என OnePlus மொபைல்களை வாடிக்கையாளர்கள் விரும்ப பல காரணங்கள் இருக்கின்றன. மிட் ரேஞ்ச் பட்ஜெட்டிலும் சரி, குறைந்த பட்ஜெட்டிலும் சரி OnePlus மொபைல்கள் வாடிக்கையாளர்களை கவர்கிறது. அந்த வகையில், OnePlus Nord சீரிஸ் மொபைல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் புதிய OnePlus Nord 4 சீரிஸ் நேற்று அறிமுகமானது. 

இந்த OnePlus Nord 4 சீரிஸில்  OnePlus Nord 4 5G மொபைல் மற்றும் OnePlus Nord CE4 Lite 5G என இரண்டு மொபைல்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்  OnePlus Nord CE4 Lite 5G மொபைல் குறைவான பட்ஜெட் கொண்டதாகும். எனவேதான், OnePlus Nord CE4 Lite 5G மொபைல் மீது மக்கள் அதிகம் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். தற்போது இந்த மொபைலின் முக்கிய அம்சங்கள், விலை, அதன் விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம். 

வேரியண்ட்களும், நிறங்களும்…

OnePlus Nord CE4 Lite 5G மொபைல் அமேசானில்தான் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த மொபைல் இரண்டு வேரியண்ட்களிலும், மூன்று நிறங்களிலும் கிடைக்கிறது. 8ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி வேரியண்ட்கள் உள்ளன. சில்வர், நீலம், ஆரஞ்சு என மூன்று நிறங்களிலும் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு, எப்போது வாங்கலாம்?

இந்த மொபைல் வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் OnePlus.in மற்றும் Amazon.in இணையதளங்களில் இதனை நீங்கள் வாங்கலாம். இல்லையெனில், OnePlus ஸ்டோர் செயலியிலும், OnePlus ஸ்டோர்களிலும், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும், Croma உள்ளிட்ட மற்ற ஸ்டோர்களிலும் இந்த மொபைல்களை நீங்கள் வாங்கலாம். மேலும், இதனை நீங்கள் ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலம் வாங்கினால் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். 

முக்கிய அம்சங்கள்

OnePlus Nord CE4 Lite 5G மொபைலில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. 2,100 nits உச்ச பிரைட்நஸ் மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடனும் வருகிறது. மேலும், ஈரமான கைகளை கொண்டு நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த பிரச்னையையும் தராத Aqua Touch அம்சத்தையும் இந்த மொபைல் கொண்டுள்ளது. இதில் Snapdragon 695 5G சிப் செட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்ட் 14 படி OxygenOS 14.0 மூலம் இது இயங்குகிறது. 

விலை எவ்வளவு?

இதில் இரண்டு பின்புற கேமரா அமைப்பு உள்ளது. 50MP+2MP ஆகிய கேமராகள் இதில் உள்ளது. 16MP செல்ஃபி கேமரா உடன் வருகிறது. தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாப்பில் IP54 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதில் 5,500 பேட்டரி உள்ளது, சி-டைப் 80W பாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது. அதாவது, 0 முதல் 100 வரை சார்ஜ் ஏற முழுமையாக 52 நிமிடங்கள் எடுக்கும். இது இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி+256ஜிபி வேரியண்ட் 22,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.