ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடுக்கும் வகையில், ஜாவா 350 மாடலில் ஸ்போக் வீல் பெற்ற மாடலை ரூ.1.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளதால், தற்பொழுது நான்கு விதமான வகையில் கிடைக்க துவங்கியுள்ளது.
2024 Jawa 350
புதிய ஜாவா 350 பைக்கின் 334சிசி என்ஜின் அறிமுகத்தின் பொழுது விலை ரூ.2.15 லட்சத்தில் துவங்கிய அதிகபட்சமாக ரூ. 2.24 லட்சம் வரை அமைந்திருந்தது. தற்பொழுது ரூ.16,000 வரை விலை குறைவான வேரியண்ட் வெளியாகியுள்ளது.
334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற ஜாவா 350 மாடலில் தற்பொழுது மூன்று புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை அப்சிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகும். முந்தைய நிறங்களான மெரூன், கருப்பு, வெள்ளை மற்றும் மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் மற்றும் அலாய் வீல்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.
நிறங்களை தவிர துவக்க நிலை வேரியண்டில் ஸ்போக்டூ வீல் மற்றும் டாப் வேரியண்டிலும் தொடர்ந்து ரெட்ரோ அனுபவத்தை வழங்க ஸ்போக் வீல் மற்றும் அலாய் வீல் என இரு ஆப்ஷனும் கிடைக்கின்றது. அலாய் வீல் கொண்டுள்ள மாடல்களில் ட்யூப்லெஸ் டயர் இடம்பெற்றுள்ளது.
Jawa 350 Variant Wise colours | Ex-showroom Price |
---|---|
Spoke Wheel – Black, Grey, Deep Forest | Rs. 1,98,950 |
Alloy Wheel – Black, Grey, Deep Forest | Rs. 2,08,950 |
Spoke Wheel – Chrome – Maroon, Black, White, Orange | Rs. 2,14,950 |
Alloy Wheel – Chrome – Maroon, Black, White, Orange | Rs. 2,23,950 |
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடலுக்கும் கடும் சவாலினை ஏற்படுத்த இந்த புதிய மாற்றத்தின் மூலம் ஜாவா நிறுவனம் ஏற்படுத்த உள்ளது. கூடுதலாக ஹோண்டா சிபி350, ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440, டிரையம்ப் ஸ்பீடூ 400 உள்ளிட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளன.