புதுடெல்லி,
நாட்டில் ஜனநாயகவும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அரசியலமைப்பு சட்டம் மிகவும் முக்கியமானது என்றும் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25-ந்தேதி இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில், இந்த கறுப்பு தினத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நாட்டில் ஜனநாயகவும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அரசியலமைப்பு சட்டம் மிகவும் முக்கியமானது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.