மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில்
இந்தியாவின் யூகி பாம்ப்ரி – அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி, இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி ஜோடி 6-3, 6-3 என நேர் செட் கணக்கில் இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் யூகி பாம்ப்ரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் பாம்ப்ரி- ஆலிவெட்டி ஜோடி அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.