2 நாள்கள் முழுசா யூஸ் பண்ணலாம்… 9 ஆயிரத்திற்கும் குறைவாக முரட்டு Realme மொபைல்!

Realme C61 Price And Specifications: Realme நிறுவனம் புதிய C சீரிஸ் மொபைல் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கி உள்ள Realme C61 மொபைல் தற்போது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஏனென்றால் இந்த மொபைலில் ArmorShell பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மொபைல் கீழே விழுந்தாலும் எவ்வித சேதாரமும் உண்டாகாது, பாதுகாப்பாக இருக்கும். இந்த மொபைல் தண்ணீரில் விழுந்தாலும் பிரச்னை வராது, ஏனென்றால் IP54 ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இத்தகைய பல அம்சங்களை கொண்ட Realme C61 குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு விரிவாக காணலாம். 

Realme C61 ஸ்மார்ட்போன் மிக மிக குறைந்த விலையில், அதாவது யாருமே எதிர்பார்க்காத அம்சங்களில் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த மொபைலில் ஆக்டா கோர் Unisoc T612 பிராஸஸர் உள்ளது. மேலும் இதில் 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நல் ஸ்டோரேடஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை மட்டுமின்றி 8ஜிபி டைனமிக் RAM கொடுக்கப்பட்டுள்ளது. 32MP பின்பக்க கேமரா உள்ளது. செல்ஃபி கேமரா குறித்த விவரம் தெரியவரவில்லை. HD+ ரெஸ்சோல்யூஷன் கொண்ட திரையை இந்த Realme C61 மொபைல் கொண்டுள்ளது.

Realme C61: பவர்புள் பேட்டரி

மேலும் இந்த Realme C61 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொண்டது. அதாவது, இதனை நீங்கள் முழுமையாக சார்ஜ் செய்து 2 நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்நிறுவனம் உறுதியாக கூறுகிறது. இதிலும் இரட்டை சிம், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த மொபைல் சஃபாரி பச்சை மற்றும் மார்பிள் கருப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் மொத்த எடை 187 கிராம் ஆகும். 

Realme C61: விலை என்ன தெரியுமா?

Realme C61 மொபைல் இந்திய சந்தையில் மூன்று வேரியண்ட்களாக களமிறங்கியிருக்கிறது. இந்த மொபைலின் அதிகபட்ச விலையே 9 ஆயிரத்திற்கும் குறைவுதான். குறைந்தபட்சமாக 4ஜிபி+64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் 7 ஆயிரத்து 699 ரூபாயக்கும், 4ஜிபி+128ஜிபி வேரியண்ட் 8 ஆயிரத்து 499 ரூபாய்க்கும், 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் 8 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. Realme C61 மொபைலை நீங்கள் வரும் ஜூன் 28ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம். மேலும், இதனை 900 ரூபாய் தள்ளுபடியிலும் இப்போது நீங்கள் வாங்கலாம். மாதத் தவணை செலுத்திக் கூட இந்த மொபைலை வாங்கலாம். ஆனால், இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது.

கவனிக்க வேண்டிய விஷயம்

Realme C61 ஸ்மார்ட்போன் 4ஜி தான். இதில் 5ஜி இணைய சேவையை செயல்படுத்த இயலாது. தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் 5ஜி இணைய சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன, அதுவும் 5ஜி சேவைக்கு தனி கட்டணமும் கிடையாது என்பதால் பலரும் 5ஜி அம்சம் கொண்ட மொபைலை வாங்குகின்றனர். 

இப்போது குறைந்த விலைக்கு 5ஜி மொபைல் கிடைக்கிறது என்றாலும் Realme வருங்காலத்தில் இந்த பட்ஜெட்டில் 5ஜியை கொண்டுவரலாம். Realme நிறுவனம் இந்த மாதத்தில் மற்றொரு மொபைல் ஒன்றையும் சந்தையில் களமிறக்கியது. Realme GT 6 5G மொபைல் இந்த மாதம் விற்பனைக்கு வந்தது. இதன் குறைந்தபட்ச விலை கொண்ட வேரியண்டே ரூ.40 ஆயிரத்து 999 ஆகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.