இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களில் ஒன்றான ஏதெர் எனர்ஜியின் மூன்றாவது தொழிற்சாலையில் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய மஹாராஷ்டிரா மாநிலத்தில் துவங்க ரூ.2,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.
ஏற்கனவே, இந்நிறுவனம் பெங்களூருவில் ஆண்டுக்கு 1.20 லட்சம் யூனிட்டுகளை தயாரிக்கும் ஆலையுடன், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு மூன்று லட்சம் யூனிட்டுகளை தயாரிக்கும் திறன் பெற்ற இரு ஆலைகளுடன் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் 4.20 லட்சம் ஆக உள்ளது.
2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் உள்ள ஆலையில் 4,000 புதிய நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ அறிக்கையில், புதிய ஆலையின் இருப்பிடம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ‘ போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கும்’ மற்றும் ‘தயாரிப்புகளை விரைவாக விநியோகிக்கும் முடியும்’ என ஏதெர் தெரிவித்துள்ளது.
ஏதெர் இந்தியாவில் 450 சீரிஸ் மற்றும் புதிய ரிஸ்டா என இரண்டு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. ஓலா, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏதெர் எனர்ஜியில் சுமார் 39 % பங்குகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் பொது பங்கு வெளியிட தயாராகி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகின்றது.