இலங்கை வெளிநாட்டலுவல்கள் அரமச்சர் அலி சப்ரி ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் யோகோகமிகாவா வின் அழைப்பின் பேரில் இச்சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பயணத்தின் போது அமைச்சர் அலி சப்ரி;, ஜப்பான் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் இப்பயணத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர்.