355 கி.மீ., வரை செல்லும் EV கார்… அதுவும் பட்ஜெட் விலையில்… டாடாவுக்கு ஆப்பு வைக்கும் Hyundai

Hyundai Inster EV Features And Range: எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. Tata நிறுவனம் EV கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னணியில் உள்ளன. மேலும், Hybrid வகை கார்களும கூட இந்திய சந்தையில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. எதிர்காலத்தில் EV சந்தை விரிவடையும் என்பதால் Tata நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியா கார் விற்பனை சந்தையில் முன்னணியில் இருக்கும் Hyundai நிறுவனம் தற்போது அதன் புதிய EV காரை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. Hyundai நிறுவனம் Inster EV என பெயரிடப்பட்ட புதிய காரை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இது அந்த நிறுவனத்தின் SUV காரான Casper (ICE) மாடலை ஒத்தது. Hyundai நிறுவனத்தின் இந்த Inster EV கார் விலை குறைந்தது ஆகும். EV கார்களிலேயே மிக குறைந்த பட்ஜெட்டில் வரும் எனவும் கூறப்படுகிறது.

Hyundai Inster EV

Hyundai நிறுவனத்தின் Inster EV கார் 3,825 மி.மீ., நீளமும், 1,610 மி.மீ., அகலமும், 1,575 மி.மீ., உயரமும் கொண்டது. வீல்பேஸ் 2,580 மி.மீ., ஆகும். முன்பே கூறியது போல் இந்த Inster EV கார், Hyundai Casper மாடல் போன்றுதான் இருக்கும். காரின் இன்டீரியரும் பக்கா மாஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சீட்களும் பிளாட்டாக மடக்கிவைத்துக் கொள்ள இயலும், மேலும், பின்பக்க சீட்கள்களை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். அதாவது, அவை Slid வகை மற்றும் Reclined வகையில் வருகிறது.

அதேபோல், 10.25 இன்ச் தொடுதிரையும் டேஷ்போர்டில் கொடுக்கப்படுகிறது. இதில் நீங்கள் மேப்பை பார்த்துக்கொள்ளலாம். மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்படுகிறது. ஒன்-டச் சன்ரூஃப் வசதியும் உள்ளது. தற்போது இந்த கார் தென் கொரியாவின் 2024 Busan International Mobility Show என்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Hyundai Inster EV: எவ்வளவு ரேஞ்ச் வேண்டும்?

மேலும் முதலில் Hyundai நிறுவனம் Inster EV காரை கொரியாவில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. அதன்பின், ஐரோப்ப நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கொண்டுச்செல்லும். அதன்பின்னர் ஆசிய பசிபிக் நாடுகளில் வரும். மேலும், இந்த கார் இந்தியாவுக்கு விற்பனைக்கு வருமா அல்லது வராதா என அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் இந்தியாவின் Tata Punch EV உள்ளிட்ட Tata EV கார்களுக்கு பெரும் போட்டியாக இருக்கும். மேலும், Inster Cross என்ற கூடுதல் அம்சங்கள் கொண்ட காரையும் வருங்காலத்தில் அறிமுகப்படுத்த காத்திருக்கிறது. 

இந்த Inster EV காரில் இரண்டு பேட்டரி பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் வேரியண்டில் 42kWh யூனிட் பேட்டரியும், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் 29kWh யூனிட் பேட்டரியும் இருக்கும். இதில் முறையே 71.7kW மற்றும் 84.5kW சக்தி கிடைக்கும். இரண்டிலும் உச்ச முறுக்குவிசை 147 Nm ஆக கிடைக்கும். மேலும், இதன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் 300 கி.மீ., ரேஞ்சையும், ஹை-எண்ட் வேரியண்ட் 355 கி.மீ., ரேஞ்சையும் தரும். மேலும், ஸ்டாண்டர்ட் வேரியண்டின் டாப் ஸ்பீடு 140 kmph ஆகும். 0-100 kmph வேகத்தை எட்ட 11.7 நொடிகள் ஆகும். லாங் வேரியண்டின் டாப் ஸ்பீடு 150 kmph ஆகும், 0-100 kmph வேகத்தை எட்ட 10.6 நொடிகள் ஆகும்.  

மேலும் படிக்க | 5 ஸ்டார் ரேட்டிங்… பாதுகாப்பில் பட்டையை கிளப்பும் இந்த டாடா கார் – நம்பி வாங்கலாம் போலையே!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.