சனி வக்ர பெயர்ச்சி: அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய 9 நட்சத்திரங்கள்!

27 நட்சத்திரங்களையும் ஒன்பது ஒன்பதாக 3 பிரிவாகப் பிரித்து பலன் சொல்கிறது ஜோதிடம். அவ்வகையில் குறிப்பிட்ட ஒரு பிரிவின் 9 நட்சத்திரக்காரர்கள், நடப்புக் காலத்தில் பரிகார வழிபாடுகள் செய்வது அவசியமாகிறது. இதன் மூலம் ஆரோக்கியம், ஆயுள், கல்யாண பிராப்தி போன்றவற்றில் சாதகமான பலன் கிடைக்க வழிவகை உண்டாகும்.

மட்டுமன்றி, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை சனிபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதாவது பூரட்டாதி 4 -ம் பாதத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், தற்போது வக்ரமாகி சதய நட்சத்திரம் வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் குறிப்பிட்ட 9 நட்சத்திர அன்பர்கள் செய்யும் வழிபாடுகள், அவர்களுக்கு பாதிப்புகளை எல்லாம் விலக்கி, நன்மைகள் நடக்க வழிசெய்யும்!

பரிகாரம் தேவைப்படும் 9 நட்சத்திரங்கள் எவை, எவ்விதமான பரிகாரங்கள் செய்யலாம் என்பது குறித்து ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் கூறும் விளக்கங்கள் இங்கே உங்களுக்காக!

பரணி நட்சத்திர தேவதை

பரணி: மேஷ ராசியைச் சேர்ந்த பரணி நட்சத்திரக்காரர்கள், செவ்வாய் ஆதிக்கம் கொண்டவர்கள். பொதுவாக இவர்களுக்கு ராகு தசா காலத்தில் உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாக லாம். பரணி உஷ்ணத் தனமை கொண்டது. ஆக, ராகு மற்றும் செவ்வாய் தசாகாலத்தில் அல்சர், உணவுக்குழாய் பகுதியில் பாதிப்புகள் ஏற்படும். நடப்புக் காலத்தில் இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்கள், செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் – புற்று வளர்ந்திருக்கும் அம்மன் ஆலயங்களில் விளக்கு ஏற்றி வழிபடுவது விசேஷம். அங்காளம்மனை தரிசித்து ஆராதிப்பதால், நற்பலன்கள் கிடைக்கும்; பாதிப்புகள் விலகும்.

கிருத்திகை: ரிஷப ராசியைச் சேர்ந்த கிருத்திகை சூரிய ஆதிக்கம் கொண்டது. பொதுவாக இந்த நட்சத்திரக் காரர்களுக்கு ராகு தசா காலத்தில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். சூரிய தசா காலத் தில் எலும்பு தொடர்பான பிரச்னைகள் வரும். அக்னி நட்சத்திரக் காலத்தில் இந்த நட்சத்திர அன்பர்களே அதிகம் பாதிப்புகளைச் சந்தித்திருப்பார்கள். இவர்கள் சூரியனுக்குப் பிரீத்தி செய்வது நலம். ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை தானம் செய்யலாம். ஆதித்ய ஹிருதயம் படித்து வழிபடலாம். சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவதால் சங்கடங்கள் நீங்கும்.

திருவாதிரை: மிதுனம் ராசி திருவாதிரைக் காரர்களுக்கு ராகு தசை ஆரம்ப தசையாக இருந்திருக்கும். பொதுவாக இவர்கள், மனதில் குழப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். சனி வக்ர காலத்தில் வீண் குழப்பங்கள் அதிகரிக்கலாம். இவர்கள் சந்திர வழிபாடு செய்வது அவசியமாகும். திங்கள் கிழமைதோறும் நவகிரக சந்திரனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். மேலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திங்களூர் சென்று வழிபட்டு வரலாம். திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடுவதும், சோமவாரப் பிரதோஷ வழிபாட்டி கலந்து கொள்வதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். இதன் மூலம் சிந்தனை சிறக்கும்; செயல்களில் வேகம் உண்டாகும்.

ஆயில்யம்: கடக ராசியைச்சேர்ந்த ஆயில்ய நட்சத்திரக் காரர் களுக்குப் பெரும்பாலும் ராகு, கேது கிரகங்களால் பாதிப்புகள் உண்டாகும். தோல் மற்றும் சளி தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். நடப்புக் காலத்தில் இந்த நட்சத்திரக்காரர்கள், வெள்ளிக் கிழமை அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவது சிறப்பு. மட்டுமன்றி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட பெருமாள் அருளும் ஆலயங்களுக்குச் சென்று துளசி சாத்தி வழிபடலாம்.

சனிபகவான்

பூரம்: சிம்ம ராசியைச் சேர்ந்த பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சனி தசாகாலத்தில் சற்றுப் பாதிப்புகள் உண்டாகும். காரியத் தடைகள் ஏற்படும். ராசி அடிப்படையில் இவர்களுக்கு கண்டகச் சனி நடைபெறுகிறது. இவர்கள், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி வழிபடுவதால் நற்பலன்கள் ஏற்படும்; உடல் – மனபலம் உண்டாகும்.

விசாகம்: துலாம் ராசி விசாக நட்சத்திரக் காரர்களுக்குப் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சிந்தனையில் ஒருவித தடுமாற்றம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே பிணக்குகள், பிள்ளைகளுடன் சச்சரவுகள் போன்ற பலன்கள் ஏற்படலாம். நடப்புக் காலத்தில் சனி வக்ர பெயர்ச்சி மற்றும் பிற கிரக நிலைகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முருகன் வழிபாடு துணை இருக்கும். இவர்கள் செவ்வாய்க்கிழமைகள், சஷ்டி தினங்களில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் சங்கடங்கள் விலகும்; சந்தோஷம் உண்டாகும். குறிப்பாக இவர்கள் வைகாசி விசாகத்தன்று விரத மிருந்து முருகனை வழிபட்டால், ஆயுள் முழுவதுமே நல்ல பலன் கள் உண்டாகும்; எல்லாவிதத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

கேட்டை: விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு சந்திரன் நீச்சம். அவருடைய தசா காலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்கள் திங்கள் கிழமைகளில் உபவாசம் இருப்பது நல்லது. அன்று அரிசி உணவைத் தவிர்க்கலாம். பெளர்ணமி தினங்களில் சத்யநாராயண பூஜை செய்வதால், எதிர்காலம் சிறக்கும். மேலும் குளத்து மீன்களுக்கு உணவிடலாம். ராமேஸ்வரம் போன்று கடற் தீரங்களில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதால் சந்திரன், சனிக் கிரக பாதிப்புகளும் தோஷங்களும் நீங்கும்.

மூலம்: தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்குச் சந்திரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களின் தசாகாலங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும். நடப்புக் காலத்தில் இவர்கள், ஞாயிறு தோறும் விஸ்வரூப கோலத்தில் அருளும் அனுமனை தரிசித்து வழிபட்டு வரவேண்டும். இதனால் சகலவிதமான சங்கடங்களும் விலகி, ஜாரிய ஜெயம் உண்டாகும். தேகம் பொலிவு பெறும்.

பூரட்டாதி: கும்பம் மற்றும் மீன ராசியைச் சேர்ந்த பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள் நடப்புக் காலத்தில் பரிகாரம் செய்வது நன்று. இவர்களுக்கு சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைதான். குடும்பப் பாரமும் அதிகம் இருக்கும். இவர்கள் சனிக்கிழமைகளில் நவகிரக சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இரும்பு தானம் அளிக்கலாம். அதேபோல் ஏழுமலையானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் அனைத்துவிதமான நன்மைகளும் உண்டாகும். மீனம் ராசி – பூரட்டாதி நட்சத்திர அன்பர்கள், வியாழனன்று முருகனை வழிபடுவது விசேஷம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.