இந்த 5 ரீசார்ஜ் பிளான்களுக்கு இலவச 5ஜி இனி கிடையாது… என்னென்னு பாருங்க…!

Jio 5G Unlimited Data Plans: 18ஆவது மக்களவை நிறைவடைந்த பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களுக்கான விலைகளை உயர்த்தியிருக்கின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதன் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களின் விலையை உயர்த்தி உள்ளன.

ஜியோ நிறுவனம் மொத்தம் 12 சதவீதம் அதன் விலையை உயர்த்தியிருக்கிறது. ஜூலை 3ஆம் தேதியில் இருந்து இவை அமலுக்கு வர உள்ளது. ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் பிளான்களில் விலையில் மட்டுமில்லை அதன் அன்லிமிடெட் 5ஜி இணைய சேவை வழங்கலிலும் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இதுதான் பல ஜியோ வாடிக்கையாளர்களின் மனதில் இடியாய் இறங்கியிருக்கிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்தான் 5ஜி இணைய சேவையை இந்தியாவில் வழங்கி வருகின்றன. இருப்பினும் 5ஜி இணைய சேவையை வாடிக்கையாளர்களுக்கு இவை வரம்பற்ற வகையில் வழங்கி வந்தது. அதுவும் 5ஜி சேவைக்கு என தனியாக கட்டணம் வசூலிக்காமல் அடிப்படை பிளான்களின் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. வோடபோன் ஐடியா 5ஜி சேவையை இன்னும் அளிக்கவில்லை.

இந்த 5ஜி இணைய சேவை நடைமுறையில் இந்தாண்டின் மத்தியில் நிச்சயம் மாற்றம் வரும் என்றும் 5ஜி சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இந்தாண்டின் தொடக்கத்தில் சில தகவல்கள் கசிந்தன.  அது தற்போது முழுமையாக உண்மையாகிவிடவில்லை என்றாலும் சில பிளான்களுக்கு 5ஜி இணைய சேவை வரம்பற்ற வகையில் கிடைக்காது என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரீசார்ஜ் பிளான்களின் விலை ஏற்றம் குறித்து ஜியோ வெளியிட்ட அறிக்கையில், இந்த 5ஜி இணைய சேவை கட்டுப்பாடு குறித்தும் அறிவித்திருந்தது. அதாவது, தினமும் 2ஜிபி டேட்டா பிளான்களுக்கு மட்டுமே இனி 5ஜி இணைய சேவை என அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் பார்த்தோமானால் தினமும் 2ஜிபி டேட்டா இல்லாத இந்த 5 ரீசார்ஜ் பிளான்களில் 5ஜி இணைய சேவை வராது.

அதாவது, உங்களிடம் 2ஜிபி டேட்டா தினமும் இருக்கும்பட்சத்தில் அது நிறைவடைந்த பின்னரும் கூட உங்களால் 5ஜி இணையத்தை வரம்பற்ற வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், 1.5ஜிபி டேட்டா பிளான் போட்டிருப்பவர்களால் அது நிறைவடந்த பின்னர் 5ஜியை பயன்படுத்த இயலாது. அவர்கள் Data Addon பிளான்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். 

அந்த வகையில், ரூ.209, ரூ.239, ரூ.479 மற்றும் ரூ.666 பிளான்களில் 5ஜி இணைய சேவை வராது எனலாம். மேலும் 336 நாள்கள் வேலிடிட்டியுடந் வரும் 1,559 பிளானுக்கு இந்த விதி பொருந்துமா இல்லையா என தெரியவில்லை. காரணம், இந்த பிளானில் மொத்தமாகவே 24ஜிபிதான் கொடுகக்ப்படும். மேலே சொன்ன அத்தனை பிளான்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதிகள் உண்டு. 

ஏர்டெல் நிறுவனமும் அதன் 5ஜி பிளான்களின் விலையை ஏற்றியுள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் பிளான்கள், தினந்தோறும் டேட்டா பிளான்கள், டேட்டா ஆட்-ஆன் பிளான்கள், போஸ்ட்பெய்ட் பிளான்கள் ஆகியவை இதில் அடங்கும். 

மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல் vs VI : எந்த பிளான்களுக்கு எவ்வளவு விலை அதிகமாகியிருக்குனு தெரிஞ்சுக்கோங்க
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.