புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இதனையடுத்து அனைவரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இந்திய அணியின் வெற்றி தேசத்துக்கே மகிழ்ச்சியைத் தந்துள்ளது என மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
“இந்திய அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
அவை சார்பில் அணியின் பயிற்சியாளர், உறுப்பினர்கள், அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறன் என அவர் தெரிவித்தார். மேலும், சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்க அணியையும் பாராட்டினார்.
மக்களவையிலும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்களை அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வாழ்த்தினார். தேசமே இந்தச் சாதனையை எண்ணி பெருமை கொள்வதாக தெரிவித்தார். அப்போது அவை உறுப்பினர்கள் ‘இந்தியா… இந்தியா…’ என முழக்கமிட்டு தங்களது வாழ்த்துகளை அணிக்கு தெரிவித்தனர்.
#WATCH | Lok Sabha Speaker Om Birla and the House congratulates Cricket Skipper Rohit Sharma and the entire Team India on winning #T20WorldCup2024 pic.twitter.com/MOI144KSxh