ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கொரில்லா 450 மாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சில உற்பத்தி நிலை படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பைக்கின் டாப் வியூ மூலம் கிளஸ்ட்டர் மற்றும் நிறங்களும் தெரிய வந்துள்ளது.
புதிய கொரில்லா பைக்கில் 452 செர்பா என்ஜின் ஆனது ஹிமாலயன் 450 பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 40hp மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
படத்தில் சிவப்பு மற்றும் தங்கம் என இரு நிற கலவையில் அமைந்து மாடலில் வட்ட வடிவ TFT கிளஸ்ட்டரானது ஹிமாலயனில் பெற்றுள்ளதை போலவே அமைந்திருக்கின்றது. அடுத்தப்படியாக, குறைந்த விலை நீல நிற வேரியண்டுகளில் சூப்பர் மீட்டியோர் 650 மாடலில் இடம்பெற்றுள்ள செமி அனலாக் முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷனை பெற்றதாக அமைந்துள்ளது.
இரு பக்க டயர்களிலும் 17 அங்குல அலாய் வீல் பெற்று இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குகள் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெறுகின்றது.
ரூ.2.30 லட்சத்துக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 மாடலுக்கு போட்டியாக டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் உள்ளது.
image source – youtube/bulletguru