காதலியை கொன்றுவிட்டு தாயாரின் கல்லறையில் அமர்ந்திருந்த இளைஞர்… போலீஸில் ஒப்படைத்த தந்தை!

காதலர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு சண்டை சில நாள்களில் சரியாகிவிடும். ஆனால் சண்டையின் போது கோபத்தில் சிலர் விபரீதமான முடிவை எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியில் வர முடியாமல் இருப்பர். மும்பை அந்தேரி மரோல் நாக்காவில் வசிக்கும் சாரா(18) என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கவாஜா சொல்கர்(22) என்பவர் காதலித்து வந்தார். சாரா 12வது படித்து வந்தார். இரவு நேரங்களில் சாரா தனது காதலனை தனது வீட்டிற்கு வரவழைப்பது வழக்கம். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் கவாஜா உடனான உறவை துண்டித்துக்கொள்ள சாரா முடிவு செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே சோசியல் மீடியாவிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்னை குறித்து பேச கவாஜா தனது காதலி வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு பின் வாசல் வழியாக சென்றார். வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சண்டையில் கவாஜா தனது காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, எலி மருந்தை வாங்கிக்கொண்டு தனது தாயாரின் கல்லறைக்கு சென்றார். எனினும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாற்றிக்கொண்டு அங்கு பல மணி நேரமாக இருந்தார். கவாஜாவுக்கு தனது தாயார் மீது அதிக பாசம். அவரின் தாயார் இறந்தவுடன் அடிக்கடி அவரது கல்லறையில் போய் அமர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மன அழுத்தம் ஏற்படும் போதும் கல்லறைக்கு செல்வது வழக்கம். கவாஜா நீண்ட நேரமாக வீட்டிற்கு வரவில்லை. உடனே அவர் கல்லறையில் தான் இருக்கவேண்டும் என்று நினைத்து அவரது தந்தை கல்லறைக்கு சென்று பார்த்த போது அங்கு இருந்தார்.

கவாஜா தனது தந்தையிடம் நடந்த சம்பவம் அனைத்தையும் தெரிவித்தார். உடனே கவாஜாவை அவரின் தந்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீஸாரிடம் சொல்லி ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாராவும், கவாஜாவும் சின்ன வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் ஒரே கட்டடத்தில் வசித்து வந்தனர். அதன் பிறகு சாரா குடும்பம் தனியாக வந்துவிட்டது. அதன் பிறகும் அவர்களிடையே உறவு தொடர்ந்து கொண்டிருந்தது என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.