மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அறுபது (60) வருட அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவையைப் பாராட்டி கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்றது.

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்க, 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்தில் சேவையில் இணைந்தார். மேலும் 03 ஜூலை 1974 இல் அமைச்சரவை அலுவலகத்தில் மொழி பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, 2024 ஜூலை 3ஆம் திகதி, அவர் அமைச்சரவை அலுவலகத்தில் ஐம்பது (50) ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.