BSNL-ன் விலை குறைந்த பிளான்கள்… ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவை விட கம்மி!

BSNL Cheap Recharge Plans: ஜூலை மாதம் வருவதற்கு முன்னரே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை சுமார் 25 சதவீதம் வரை உயர்த்தி இருந்தன. 

அதாவது, மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் தொடங்கி, காலாண்டு திட்டம், வருடாந்திர திட்டம் என அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. ஜியோ நிறுவனம் இதுவரை 5ஜி இணைய சேவையை அனைத்து ரீசார்ஜ் பிளான்களுக்கும் வழங்கி வந்த நிலையில், தற்போது தினமும் 2ஜிபி அல்லது அதற்கு மேலான டேட்டாவை கொண்ட பிளான்களுக்கு மட்டுமே 5ஜி சேவை வரம்பற்ற வகையில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி இணைய சேவை உங்களுக்கு இலவசமாக வரம்பற்ற வகையில் வேண்டுமென்றால் நீங்கள் குறைந்தபட்சம் தினமும் 2ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தாக வேண்டும். 

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த விலை உயர்வு என்பது இன்று முதல் (ஜூலை 3) அமலுக்கு வருகிறது. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஆம், மூன்று பெரிய நிறுவனங்களும் ரீசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதே விலையில்தான் ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த விலை குறைவான ரீசார்ஜ் பிளான்கள் அதன் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி புதிய வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்துதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களின் அதே ரீசார்ஜ் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவை குறித்து இதில் காணலாம். இவை வடக்கு கிழக்கு, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தாது. நாடு முழுவதும் மற்ற பகுதிகளில் இவை கிடைக்கும். 

பிஎஸ்என்எல் ரூ.1999 பிளான்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாள்கள் ஆகும். இதில் வரம்பற்ற காலிங் வசதி கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 600ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.797 பிளான்: இதன் வேலிடிட்டி 300 நாள்கள் ஆகும். இதில் முதல் 60 நாள்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற காலிங் வசதி கொடுக்கப்படுகிறது. 

பிஎஸ்என்எல் ரூ.397 பிளான்: இதன் வேலிடிட்டி 150 நாள்கள் ஆகும். இதில் முதல் 30 நாள்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற காலிங் வசதி கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.197 பிளான்: இதன் வேலிடிட்டி 70 நாள்கள் ஆகும். இதில் முதல் 18 நாள்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. வரம்பற்ற காலிங் வசதி கொடுக்கப்படுகிறது மொத்தமாக 70 நாள்களுக்கும் வரம்பற்ற காலிங் வசதி வேண்டுமென்றால் ரூ.199 பிளானை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். 

பிஎஸ்என்எல் ரூ.107 பிளான்: இதன் வேலிடிட்டி 35 நாள்களாகும். மொத்தமாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 200 நிமிடங்கள் வரை காலிங் வசி கொடுக்கப்படுகிறது. இதேபோல் 108 ரூபாய்க்கும் ஒரு பிளான் உள்ளது. இது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் 28 நாள்களுக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, வரம்பற்ற காலிங் வசதியும் உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த பிளான்கள் அனைத்திலும் 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் இன்னும் 5ஜி சேவையை கொண்டு வரவில்லை. இதேபோன்ற பிளான்கள் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியா ஆகியவற்றிலும் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.