ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து – ருமேனியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. நெதர்லாந்து அணியின் காக்போ ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து நெதர்லாந்து வீரர் டோனில் மலேன் 83வது நிமிடத்திலும் , 90வது நிமிடத்திலும் கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதி பெற்றது .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.