லக்னோ: உத்தர பிரதேசத்தின் மொரா தாபாத் மாவட்டத்தில் குந்தர்கி பேரவைத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஜியா உர் ரஹ்மான், அண்மையில் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் சம்பல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து குந்தர்கி தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தொகுதியில்முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைபாஜக மேலிடம் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் கூறும்போது,“உ.பி.யில் 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது. எனவே உ.பி.யில் இழந்த தொகுதிகளை பாஜக மீட்க முயன்று வருகிறது.
எனவே, குந்தர்கி தொகுதியில் பிரபலமான முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்த மாநில பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைத் தேர்வு செய்து பாஜக மேலிடத் தலைவர்களுக்கு மாநில பாஜகஅனுப்பும். பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட் பாளர் பெயரை கட்சி மேலிடம் அறிவிக்கும்” என்றார்.