புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் ரியா சர்மா (32). இவர், கொழுப்பு நிறைந்த மற்றும் துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அவரது உடல் எடை அதிகரித்தது. சில வாரங்களுக்கு முன் வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் ஏற்பட்டது.
குடும்ப மருத்துவரை அணுகிய பின்னர் பரிசோதனையில் அவருக்கு பித்தப்பை முழுவதும்கற்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் டெல்லியில்உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் துணைத் தலைவர் மணீஷ் கே.குப்தா கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அப்பெண்ணின் பித்தப்பை அகற்றப்பட்டது. அதில் சுமார் 1,500 கற்கள் இருந்தன. கற்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் மறுநாளே அப்பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையேஅதிக இடைவெளி எடுத்துக்கொள்வது, நீண்ட நேரம் சாப்பிடாமல்இருப்பது போன்றவை பித்தப்பையில் கல் உருவாக காரணமாகிறது.
இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறினால் சிறியகற்கள் பொதுவான பித்த நாளத்தில் இடம்பெயர்ந்து மஞ்சள் காமாலை மற்றும் கணைய அழற்சியை உருவாக்கும், அதே சமயம் பெரிய கற்கள் நாள்பட்ட எரிச்சல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்” என்றார்.