சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ அனுமதி வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமான ஈட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், நல்லது கெட்டது என அனைத்து விழாக்களுக்கும் விளம்பர பலகைகள், பதாதைகள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விளம்பர பதாதைகள் வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், சாலையோரங்களில் விளம்பர பதாதைககள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது […]