கும்மிடிப்பூண்டி: சாலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில், வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய போது இளைஞர் தீக்குளித்தார். தீக்குளித்த ராஜ்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஒ. பாக்கிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது , […]