கிளிநொச்சி மாவட்டத்தின் ஜீலை மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று (04) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
வேரவில் கிராம அலுவலர் பிரிவில் காற்றாளை மின் உற்பத்தி திட்டம், புலோப்பளை காற்றாளை நிர்மாணத்திற்கான திட்டம், கோவில் வயல் 10MW சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் திட்டமுன்மொழிவுகள் ஒருங்கிணைப்புக்குழு அனுமதிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டன.
இவை தொடர்பாக மேலும் பொதுமக்களின் கருத்துக்கள், விடய ஆய்வுகள் தொடர்பான மேலதிக விடயங்களை உள்ளடக்கியதாக அடுத்த கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு தீரமானிக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.