மதுரை: இளைஞர்களின் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு மதுபான கொள்கைளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. நாளைய சமுதாயத்தின் தூண்களாக விளங்கும் இளைய தலைமுறையினரின் நலனை உறுதி செய்யும் வகையில், மதுபானக் கொள்கையை மாநில அரசு மறுபரிசீலனை செய்து, உணர்வு பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த டி.பிரபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், திருச்சி வொரையூரில் குழுமணி மெயின் […]