மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு தேவையாக இருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியால் தன்னிச்சையாக 9 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. சிவசேனா(உத்தவ்) தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணியால் இரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். ஆனால் மகாவிகாஷ் அகாடி 3 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. பா.ஜ.க 5 வேட்பாளர்களையும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இரண்டு வேட்பாளர்களையும், துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும் நிறுத்தி இருக்கின்றனர்.
அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே அஜித்பவார் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சரத்பவார் கட்சியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டமேலவை தேர்தலில் அஜித் பவார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களிக்கக்கூடும் என்ற அச்சம் அஜித் பவார் அணியில் இருந்து வருகிறது. இதே போன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிலும் சில எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அணிக்கு திரும்பும் மன நிலையில் இருக்கின்றனர். அவர்களும் கட்சி மாறி வாக்களிக்க கூடும் என்று தெரிகிறது. இதனால் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
உத்தவ் தாக்கரே தனது உதவியாளர் மிலிந்த் நர்வேகரை நிறுத்தி இருக்கிறார். மிலிந்த் நர்வேகர் வெற்றி பெற மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு அவசியமாக இருக்கிறது. இத்தேர்தல் யுக்தி குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இது தவிர உத்தவ் தாக்கரே, சரத்பவார், காங்கிரஸ் தலைவர்கள் பிரித்விராஜ் சவான், பாலாசாஹேப் தோரட் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து இது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் பா.ஜ.க, உத்தவ் தாக்கரே ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88