“சுவசெரிய வைத்தியசாலை சேவை” எனும் பெயரில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு விசேட பஸ் சேவை 

  • எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குறுகிய காலத்துக்குள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திறமை நாட்டின் சுகாதார சேவைக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விசேட பஸ் சேவை ஒன்று அவசியமானதுடன், அது தொடர்பாக கவனம் செலுத்திய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தனவின் பங்கு பற்றலுடன் “சுவசெரிய வைத்தியசாலை சேவை” எனும் பெயரில் விசேட பஸ் சேவை ஒன்று நேற்று  (05) ஶ்ரீ ஜயவர்தனபுர வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 

இதற்கு முன்னர் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண மற்றும் வைத்தியசாலையின் ஊழியர் குழுவுடன் வைத்தியசாலையின் முன்னேற்றம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

இதன் போது ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெறுவதற்காக வரும் மக்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினையாக போக்குவரத்து சிக்கல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக விசேட அவதானம் செலுத்திய சுகாதார அமைச்சர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து, இந்த விசேட பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.  

 

மகரகம, தலவதுகொட, பொரெல்ல, கோட்டை (138/212/174) நகரங்களை உள்ளடக்கியதாக வைத்தியசாலை வரை இப்போக்குவரத்துச் சேவை நடைமுறைப்படுத்தப்படும்.

 

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன…

 

“எவ்வித சிக்கல்களுக்கு முகம் கொடுத்தாலும் மிகக் கறுகிய காலத்திற்குள் பழைய நிலைமைக்கு வரும் விசேட திறன் நாட்டின் சுகாதார சேவைக்கு காணப்படுவதாக தெரிவித்தார். 

 

ஜப்பான் நாட்டினால் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தனவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட வைத்தியசாலைக்கு  40 வருடங்கள் ஆனாலும் மிகவும் விசேட நிர்வாணம் என்று சுட்டிக்காட்டியதுடன், வைத்தியசாலையில் காணப்படும் நிலைமைக்கு மிகவும் விசேட சுகாதார சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு சகலரும் உதவி ஒத்தாசை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

 

இங்கு உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன…

 

“இலங்கை போக்குவரத்து சபை பொது போக்குவரத்தாக அதன் சகல சேவை யாளர்களுக்கும் கடும் அர்ப்பணிப்புடன் சேவை வழங்குவதாகக் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சபை நாட்டின் தேசிய சொத்து என்றும், சிசுசெரிய எனும் பெயரில் பாடசாலை மாணவர்களுக்காக பஸ் போக்குவரத்து சேவை செயற்படுவதாகவும் அரசாங்கம் வருடத்திற்கு 2000 மில்லியன் உதவியை அதற்காக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு வருவதற்கு பஸ் சேவை இல்லாமையினால் இந்த விசேட பஸ் சேவைக்கு இரண்டு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த சேவையைப் பெற்று  வைத்தியசாலையினால் வழங்கப்படும் சிகிச்சையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

 

தற்போது ஆரம்பிக்கப்பட்ட பஸ் சேவை எதிர்காலத்தில் சிசுசெரிய எனும் பெயரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.