நத்திங் CMF Phone 1 … அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வாங்கலாம் ..!!

நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் CMF தனது முதல் ஸ்மார்ட்போன் CMF Phone 1 என்ற மாடலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. CMF இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். கடந்த சில நாட்களாக சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CMF ஃபோன் 1 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதனை நிறுவனம் அறிமுக நிகழ்வை நேரிடையாக சமூக ஊடக தளங்களில் ஒளிபரப்ப உள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இதன் நேரடி ஒளிபரப்பிலும் வெளியீட்டு நிகழ்வைக் காணலாம்.

OnePlus Nord CE 4 Lite, Vivo T3, iQOO Z9 போன்ற ஸ்மார்போன்களுக்கு இணையான சிறந்த போனாக CMF ஃபோன் 1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போனாக உள்ள இந்த போன் 5000mAh பேட்டரி மற்றும் AMOLED டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனில் (Smartphone) மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி சிப்செட் இடம்பெறும். இந்த சிப்செட் டிஎஸ்எம்சி 4nm ப்ராசஸ்-ல் கட்டமைக்கப்பட்ட 8-கோர் ப்ராசஸர் கொண்டது. இதில் 6.7 இன்ச் ஃபுல் HD பிளஸ் LTPS AMOLED டிஸ்ப்ளே இருக்கும். டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்ட இந்த ஸ்மார்போனில், 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை, இதில் 5000mAh பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் – கஸ்டமைஸ் செய்யப்படக்கூடிய அதன் பேக் பேனல் ஆகும். ஸ்மார்ட்போனின் பேக் பேனலை அகற்றிவிட்டு, வாடிக்கையாளர் தனக்கு பிடித்த கருப்பு, நீலம், வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் மாற்றக் கூடிய பேக் பேனல்களை கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.

 சிஎம்எஃப் போன் 1-ல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் உள்ளது. அதோடு ஃபோனில் 2TB சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இருக்கும். மேலும், இதில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 ப்ராஸசருடன் வருகிறது. இந்த போனில் 2 வருட OS அப்டேட்களும் 3 வருட பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலையை பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட CMF ஃபோன் 1 மாடலின் அடிப்படை வேரியண்டின் விலை ரூ. 15,999 என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.17,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. நத்திங் ஃபோன் 1 வாங்க அறிமுக சலுகை கொடுக்கப்படும் நிலையில், இதின் விலை ரூ.14,999 ஆக இருக்கும். இதனை பிளிப்கார்டில் இதனை வாங்கலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.