கிராமிய பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக 2000மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

கிராமியத் துறையில் சிறுகைத்தொழிலில் ஈடுபடும் பெண் சுயதொழில் முயற்சியாண்மையை வலுப்படுத்துவதற்காக மானிய அடிப்படையில் கடனுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி கிடைத்துள்ளது.
 
 அதன்படி இவ்வருடத்தில் அதற்காக 2000மில்லியன் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இளைஞர் விவசாயக் கிராம வாரத்தை ஆரம்பித்த முதலாவது கிராமமாக ஹங்குரன்கெத கலஉடகல கிராமத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
கலஉடகல ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 
இதன்போது பல்வேறு விவசாய வேலைத்திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான விவசாய உபகரணங்கள், கோழிக் குஞ்சுகள், மற்றம் கௌபி கன்றுகள், பாக்கு மரங்கள் மற்றும் ஏனைய பழ மரங்கள் என பல சுயதொழில் ஊக்குவிப்புக்கு அவசியமான பல பகிர்ந்தளிக்கப்பட்டன.

இளம் விவசாய முயாற்சியாண்மை வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 160 கிராமங்களில் மேற்பார்வையின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு கிராமத்திற்கு 10 மில்லியன் ரூபா வீதம் 160 கிராமங்களுக்காக 1600மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கலஉடகல கிராமத்தின் இளம் விவசாய முயற்சியாண்மையை ஆரம்பித்து விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உரையாற்றுகையில் “நாம்   இளைய சமுதாயத்தினரை விவசாயத் துறையில் ஆர்வமூட்டுவதற்காகவே இவ்விளம் விவசாய சுயதொழில்

இது வரைய காலம் அமைசச்சர்களினால் நடைமுறைப்படத்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்குப் பதிலாக முதற் தடவையாக மக்களின் இயலுமைக்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கீடு மற்றும்    ஏனைய தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அவசியமான சகல ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும்.

எமது இலக்கு பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்பட்ட கிராமமொன்றை உருவாக்குதலாகும்.  அதனால் 160 கிராமங்களும் பொருளாதார மற்றும் விவசாய ரீதியாகவும், பூரணப்படுத்தப்பட்ட கிராமமொன்றாக அபிவிருத்தி செய்யப்பட்ட, நாம் எல்லோருக்கும் உதாரணமாகும் விதமாக வெற்றிகரமான கிராமமொன்றை நிருமாணிப்பதே எமது இலக்கு என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.