சென்னை வரும் டிசம்பர் மாதம் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தமிழகத்தில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுவதும் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளிடையே இந்த ரயில்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளதால் நீண்ட தொலைவுக்கு இந்த ரெயில்களை இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது., […]