சுசுகி மோட்டார்சைக்கிளின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகின்ற டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வெளியாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலின் அடிப்படையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தியிருந்தது. எனவே அதன் அடிப்படையிலான மாடலை தான் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் முதற்கட்டமாக ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
XF091 என்ற குறியீடு பெயரில் தயாரிக்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஃபிக்ஸ்டூ பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட இ-பர்க்மேன் மாடலில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை பெற்றிருந்தது.
இந்தியாவில் சுசூகி நிறுவனம் ஆக்செஸ் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் மூலம் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றிருக்கின்றது. மேலும் இதில் ஏதேனும் ஒரு ஸ்கூட்டரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
வரவுள்ள மாடல் ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற ஓலா, ஏத்தர், பஜாஜ் சேத்தக், வீடா மற்றும் வரவுள்ள ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் 100 முதல் 150 கிலோமீட்டர் ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.