மாசு குறைவாக வெளியிடுவது பெட்ரோல் கார் தான்! எலக்ட்ரிக் காரில்லை, அதிர்ச்சி தரும் ஆய்வு!

பெட்ரோல் கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் காற்றை மாசுபடுத்துவதாக சொல்லும் ஆய்வு ஒன்று அதிர்ச்சியளிக்கிறது.  மின்சார கார்களின் எடை, வழக்கமான கார்களின் டயர்களின் எடையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மின்சார கார்கள் மாசை கணிசமாக அதிகரிக்கின்றன என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  

அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபடியாக, பூமியைக் காப்பாற்றும் முயற்சியில் வளிமண்டலத்தில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் விதத்தில், மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை உலகளவில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வழக்கமான எரிபொருளிலிருந்து பசுமை எரிபொருளுக்கு மாறுவதை ஊக்குவிக்க பல சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்த நிலையில், வழக்கமான வாகனங்களை விட EVகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்ற எண்ணத்தில், மக்கள் தங்கள் வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவதாக இருக்க வேண்டும் என விரும்பி வாகனங்களை மாற்றி வரும் நிலையில், மின்சார வாகனங்கள் நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல என்று கூறும் புதிய ஆய்வு வித்தியாசமான கூற்றை முன் வைக்கிறது. 

உமிழ்வு தரவு பகுப்பாய்வு நிறுவனமான Emission Analytics இன் ஆய்வின்படி, உள் எரிப்பு இயந்திரங்களால் (ICE) இயங்கும் கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் அதிக மாசுபாட்டை உமிழ்கின்றன. அதற்கு காரணம், இந்தக் கார்களில் பிரேக்குகள் மற்றும் டயர்கள் ஏற்படுத்தும் துகள் மாசுபாடே ஆகும்.  

மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் டயர்களின் எடை அதிகமாக இருப்பதால், அவற்றின் பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து கார்பன் துகள்கள் அதிக அளவில் வெளியேறுகின்றன. இது, திறமையான வெளியேற்ற வடிகட்டிகள் கொண்ட நவீன எரிவாயு வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுத் துகள்களைவிட பெரிய அளவில் இருப்பது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிக எடை கொண்ட டயர்கள் வேகமாக சிதைந்து, நச்சு இரசாயனங்கள் மற்றும் மிகச் சிறிய துகள்களை காற்றில் வெளியிடுகிறது. டயர் தேய்மானம் EV களின் மாசுபாட்டின் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும், ஏனெனில் அவை கச்சா எண்ணெயிலிருந்து பெறப்பட்ட செயற்கை ரப்பரில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மறுபுறம், வழக்கமான எரிபொருள் கார்கள் குறைந்த துகள்கள் மற்றும் டயர் இரசாயனங்களை காற்றில் வெளியிடுகின்றன.

மின்சார வாகனங்களில் உள்ள பேட்டரிகளின் எடை பிரேக்குகள் மற்றும் டயர்களில் அதிக அழுத்தத்தை செலுத்துகிறது, இது தேய்மானம் மற்றும் டயர்கள் கிழிந்துபோவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரை டன் பேட்டரியைப் பயன்படுத்தும் மின்சார வாகனத்தின் டயர் ஏற்படுத்தும் மாசு, புதிய பெட்ரோல் காரில் இருந்து வெளியேறுவதை விட 400 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

மின்சார மற்றும் பிற எரிபொருள் வாகனங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் டெயில்பைப் உமிழ்வுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. ஆனால், டயர்கள் மற்றும் பிரேக்குகளின் தேய்மானம் மற்றும் கிழிவுகளையும் கணக்கில் கொண்டு, மாசு தொடர்பான மதிப்பீடுகள்  செய்யப்பட வேண்டும் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் vs பெட்ரோல் கார்
பெயர் குறிப்பிடுவது போல, ஒரு மின்சார கார் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி பேக்கில் சேமிக்கப்படும் மின் ஆற்றலில் இயங்குகிறது, அதேசமயம் வழக்கமான கார்கள், பெட்ரோல் டீசல் அல்லது சிஎன்ஜியால் இயங்குபவை. 

மின்சார கார்கள் மற்றும் பெட்ரோல்/டீசல் கார்களின் வெளிப்புற வடிவமைப்புகள் ஒரே மாதிரியானவையாக இருந்தாலும், மின்சார வாகனத்தின் வெளிப்புற வடிவமைப்பு உட்பட பல விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்படும், அந்த மாற்றங்களில் குறிப்பிடத்தகவை பிரேக் மற்றும் டயர்கள் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.