தருமபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை கிராமப்பகுதிகளில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 2500 கிராமங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் எளிதாக சென்று சேருவதற்காக மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு உள்ளூர் அளவிலேயே முகாம்களை […]