ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ டேக் ஏர் என்னும் புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது. கார் சாவி, வீட்டு சாவி, வாலட்டுகள், லக்கேஜ்கள் போன்றவற்றை, நாம் வைத்திருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள உதவும் கருவி இது. வயர்லெஸ் ட்ராக்கிங் டிவைஸ் கருவியான இது, பொருட்களை, எந்த இடத்தில் வைத்து விட்டோம் என்று மறந்து தேடும் நபர்களுக்கு, உதவும் சிறந்த கருவி. காணாமல் போனவற்றை கண்டுபிடிக்க உதவும் வகையில், சத்தமாக ஒலி எழுப்பும், இன்பில்ட் ஸ்பீக்கரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
நவீன அம்சங்களுடன் ஜியோ வயர்லெஸ் டிவைஸ் ட்ராக்கிங் கருவி
வயர்லெஸ் டிவைஸ் ட்ராக்கிங் கருவியான இது, ப்ளூடூத் 5.3 இணைப்பு கொண்டது. சென்ற ஆண்டு படுத்தப்பட்ட ஜியோ ட்ராக்கர் கருவியின் அடுத்த கட்டப் பதிப்பாக நவீன அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்களும் இதனை பயன்படுத்தலாம் என்று ஜியோ கூறியுள்ளது.
ஜியோ ஏர் டேக் கருவியை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தலாம்
கடந்த ஆண்டு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோ டேக் என்ற ட்ராக்கிங் கருவி, ஜியோ திங்க் (Jio Thing) செயலியில் மட்டுமே இணைந்து செயல்பட கூடியதாக இருந்த நிலையில், இப்போது ஜியோ திங்க்ஸ் ஆப், ஆப்பிள் பைண்ட் மை (Apple Find My) ஆகிய இரண்டு செய்திகளிலும் இதனை பயன்படுத்தலாம். எனினும் ஒரு சமயத்தில் ஒரு செயலியை மட்டுமே இதனை நினைத்து பயன்படுத்தலாம்.
ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜியோ ஏர் டேக் கருவியை பயன்படுத்தும் முறை
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், ஜியோ திங்க்ஸ் ஆப் என்ற செயலுடன், ஜியோ ஏர் டேக் கரிவியை இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆப்பிள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஃபைண்ட் மை செயலி மூலம், இதனை இணைத்துக் கொண்டு, பொருட்கள் எங்கே இருக்கின்றன என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.
ஜியோடேக் ஏர் கண்காணிப்பு கருவியின் பேட்டரி திறன்
ஜியோடேக் ஏர் ஒரு லேன்யார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பேட்டரி வசதி கொண்ட இதனை பயனர்கள் கீசெயினுடன் இணைத்து பயன்படுத்தில் கொள்ளலாம்.JioTag Air கருவியில் ஒரு பேட்டரி 12 மாதங்களுக்கு நீடிக்கும்.
செல்லபிராணிகளை கண்காணிக்கும் கருவியாக செயல்படும் ஜியோ டேக் எர்
JioTag Air கருவியினை செல்லப்பிராணி கண்காணிப்பாளராகவும் பயன்படுத்தப்படலாம், மேலும் இதில் கடைசியாக இணைக்கப்பட்ட இடம், டேக்கை கண்டறிய ரிங் செய்தல், தொலைபேசியில் அலெர்ட்களை துண்டித்தல், ஸைலண்ட் ரீஜன், டிவைஸ் ஷேரிங் மற்றும் பல போன்ற தகவல்களையும் வழங்குகிறது.
ஜியோ டேக் ஏர் விலை விபரம்
ஜியோ டேக் ஏரை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில், அதிக பட்ச சில்லறை விலை 2999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதனை 1499 ரூபாய்க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கருவி சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கிறது. குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மற்றும் பேடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் இதில் உங்களுக்கு கேஷ் பேக் உள்ளிட்ட ஆஃபர்களும் கிடைக்கும். ஜியோமார்ட், ரிலையன் டிஜிட்டல், அமேசான் ஆகிய தளங்கள் வாயிலாகவும் இதனை வாங்கிக் கொள்ளலாம்.
JioTag Air மற்றும் Apple AirTag ஒரு ஒப்பீடு
JioTag Air என்னும் ட்ராக்கிங் கருவி Apple AirTag போன்ற அம்சம் நிறைந்ததாக இல்லாவிட்டாலும், Apple கருவி அளவிற்கு விலை உயர்ந்தது இல்லாமல், பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ட்ராக்கிங் கருவி 3,490 ரூபாய்க்கு விலைக்கு கிடைக்கும், நீங்கள் மலிவான டிராக்கரை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், JioTag Air சிறந்த தேர்வாக இருக்கும்.