பொருட்களை வாங்க மட்டுமல்ல, கட்டணங்களையும் செலுத்தவும் தயாராகிவிட்டது ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட் செயலியில் பில்களை கட்டுவது மற்றும் மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்ற பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செயலியின் மூலம் மின்சார கட்டணம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் என கட்டணங்கள் செலுத்துவதை எளிதாக்க, BillDesk நிறுவனத்துடன் இணைந்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் செயல்படுகிறது. 

தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஃப்ளிப்கார்ட்
ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ஃப்ளிப்கார்ட், தற்போது தனது வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. ஃப்ளிப்கார்ட் செயலியை பயன்படுத்துபவர்கள் இனி, கட்டணங்களையும் பில்களையும் அதன் மூலம் செலுத்தலாம். அதேபோல, மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளையும் பெறலாம்.

மின்சாரக் கட்டணம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகியவை முன்னரே இருந்தாலும், தற்போது வேறுபல வசதிகளையும் சேர்த்து, தனது செயலியை ஃப்ளிப்கார்ட் மேம்படுத்திக் கொண்டே செல்கிறது. இனிமேல் ஃப்ளிப்கார்ட் செயலியை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? தெரிந்துக் கொள்ளுங்கள்.

இப்போது Flipkart செயலியில், fastag ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், தொலைபேசி கட்டணத்திற்கான பில், பிராட்பேண்ட் பில், மொபைல் போஸ்ட்பெய்ட் பில் உட்பட பல பில்களை செலுத்தலாம்.

இந்த கட்டணங்களை எளிதாக்க, Flipkart BillDesk நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கட்டண நிறுவனமான BillDesk , Flipkart, Bharat Bill Payments System (BBPS) உடன் இணைந்து இந்தப் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சலுகை
இந்த புதிய சேவைகளை விளம்பரப்படுத்த பிளிப்கார்ட் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. Flipkart UPIஐப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், முழு பில்லுக்கும் 10% வரை தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதும் Supercoins மூலம் இந்த பத்து சதவிகித தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Flipkart UPI சேவை என்பது, ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துவதற்கான பாதுகாப்பான மற்றும் எளிதான வழி என்று நிறுவனம் கூறுகிறது. வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி SuperCoins மற்றும் கேஷ்பேக் வடிவில் வெகுமதிகளைப் பெறலாம். ஆன்லைனில் ஷாப்பிங் செய்தாலும் அல்லது பில்களை செலுத்தும்போதும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிஜிட்டல் கட்டண அனுபவத்தையும் மேம்படுத்தும் ஃப்ளிப்கார்ட்டின் இந்த சேவை இன்னும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. தற்போது யூபிஐ ஏப்கள் எனப்படும் பல்வேறு நிறுவனங்களின் செயலிகள், கட்டணங்களை செலுத்த பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் டிஜிட்டல் மூலம் கட்டணங்களை செலுத்தும் முறையை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற சேவைகள் அடிப்படை ஆதாரமாக மாறியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.