Pathan Brothers fight Viral Video : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய சகோதரர்கள் யூசப் பதான், இர்பான் பதான். இருவரும் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்து இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள். இப்போது இருவரும் மைதானத்துக்குள்ளேயே ஆக்ரோஷமாக சண்டைப்போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இருவரும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடரில் இந்திய அணிகாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த சண்டை நடந்திருக்கிறது.
இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடரின் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய சாம்பியன்ஸ் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற யுவராஜ் சிங் தலைமையிலான அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க சாம்பியன்கள் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் சேர்த்தனர். பின்னர் சேஸிங் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடி எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. எனினும், சுரேஷ் ரெய்னா (25), ராபின் உத்தப்பா (21) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இது அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லக்கூடிய ஸ்கோர்களாக அமையவில்லை. பின்வரிசையில் இறங்கிய இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் மீது அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் விழுந்தது.
இர்பான் பதான் ரன் அவுட்
இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த வேளையில் இர்பான் பதான் ரன்அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ரன்அவுட்டின்போது தான் யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் இடையே சண்டை மூண்டது. இர்பான் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது, விக்கெட் கீப்பர் முனையில் இருந்த யூசப் பதான் சரியான கால் கொடுக்கவில்லை.
July 11, 2024
இர்பான் பதான் பாதி கிரவுண்ட் ஓடியபிறகு ரன் வேண்டாம் என யூசப் பதான் மறுக்க, இர்பான் பதான் மீண்டும் பவுலர் என்டுக்கு ஓடினார். அதற்குள் துரோ சரியாக வந்து இர்பான் ரன்அவுட்டானார். இதில் கடும்கோபமடைந்த அவர், அண்ணன் யூசப் பதானை மைதானத்திலேயே திட்டிவிட்டார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணி தோல்வி
முடிவில், இந்தப் போட்டியில் இந்திய சாம்பியன்கள் அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 54 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய யூசப் பதான் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.