ஆண்களை தன் விருப்பப்படி ஆட்டுவித்து, அவர்களை அடிமைபோல நடத்தி அதன்மூலம், காசு பார்த்து வருகிறார் அமெரிக்க பெண் ஒருவர். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த பிசினஸ் தனக்கு நிறைவைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. யாரையும் பாதிக்காதவரை, எந்த வழியும் நல்ல வழிதான். பிறர் உழைப்பைச் சுரண்டி, பிறரை அவமதித்து அதன் மூலம் நாம் காசு பார்ப்பது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
வருவாய் ஈட்ட விபரீத யோசனை
அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது பெண் மார்லி (Marley), இணையத்தில் பல வேலைவாய்ப்புகளைத் தேடியுள்ளார். வெப் கேமிங் வாய்ப்பு வந்தது. ஆனாலும், அதில் அவரது மனம் ஒப்பவில்லை. பின்னர்தான் அவருக்கு வித்தியாசமான ஓர் எண்ணம் உதித்துள்ளது.
நாம் ஏன் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்று தோன்றியுள்ளது. அதன்படி, ஆண்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை சில மணி நேரங்களுக்கு அவர்கள் சம்மதத்துடன் அடிமைபோல் நடத்ததுவது என முடிவெடுத்தார்.
இதென்ன விபரீத யோசனையாக இருக்கிறது? யாராவது காசு கொடுத்து தன்னை அவமானப்படுத்திக் கொள்ள முன்வருவார்களா என்று நினைக்கலாம். ஆனால், மார்லியின் யோசனை சரிதான் என்று, அவர் இந்த பிசினஸைச் தொடங்கிய பின் கிடைத்த வரவேற்பில் தெரிய வந்தது.
சர்ச்சை தொழிலானாலும் சக்கைபோடு!
யார் இந்த மார்லி? அவரது பின்னணி என்னவென்று பார்ப்போம். அமெரிக்க கறுப்பின பெண்ணான மார்லி, 6 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த சூட்டோடு, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால், அங்கு அவர் பெற்ற ஊதியம் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்தார்.
அதன்பின் இணையத்தில் பெண்களுக்கான பல பிசினஸ்களை தேடியபோது தான், மார்லிக்கு இந்த யோசனை தோன்றியிருக்கிறது. சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இப்போது இந்தத் தொழிலை அவர் லாபகரமானதாக மாற்றி இருக்கிறார்.
மார்லியை சந்திக்க வரும் வாடிக்கையாளர்கள், அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு, அவர் ஆட்டுவிப்பதற்கு ஏற்ப நடந்து கொள்கின்றனர். மார்லி, ஆண்களை வாய்க்கு வந்தபடி பேசி அவமானப்படுத்துகிறார்; இன்னும் சில தருணங்களில் ஆண்களைக் கட்டிப்போட்டு, விலங்கை போல நடத்துவார். அவரின் கால்களில் அடிமையாகக் கிடக்க வேண்டும்.
‘சுதந்திரத்தைப் பெற முடிந்தது’
ஆனால், இதையெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவரின் ஆண் வாடிக்கையாளர்கள், பதிலுக்கு பணத்தை வாரி இறைந்து மார்லியை குஷிப்படுத்திச் செல்கின்றனர். கறுப்பினத்தவரான மார்லியின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள், அமெரிக்க வெள்ளையினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் தனது தொழிலை தொடர்வதில் மார்லி உறுதியாக இருக்கிறார். அவர் கூறும்போது, “இந்த வாழ்க்கை முறை எனக்கு நல்லதொரு நிலையை, நிறைவைத் தந்திருக்கிறது. நான் கம்பிகளுக்குப் பின்னால் அல்லது ஒரு பெட்டியில் பூட்டப்பட்டிருக்கிறேன் என்று உணராமல் இருக்க, ஆக்கபூர்வமான சுதந்திரத்தை என்னால் பெற முடிந்தது” என்றார்.
மார்லியின் உதவியாளராக இருக்கும் பீட்டா கூறுகையில், அவர் ஒரு பாதுகாவலர் என்றும் வழிகாட்டி எனவும் புகழ்ந்தார். “மார்லி எனக்கு பணிகளைத் தருகிறார். அதைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருடன் இருக்கும் போது நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். சில சமயங்களில், இதுவே என் வாழ்க்கையின் நோக்கம் என்று நினைக்கிறேன். பெண்களுக்கு, குறிப்பாக மார்லிக்கு நான் சேவை செய்ய வேண்டும்” என்றார்.