ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார் – அமைச்சர் பந்துல குணவர்தன

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் காலம் தொடர்பாக (11) பாராளுமன்றத்தை ஒத்திப்போடுதல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் உட்பட சகல தேர்தல்களும் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குத் அறிவித்துள்ளார்.

அதன்படி முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும். அதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் தேர்தலை நடாத்த முடியும். ஆமைச்சரவைப் பேச்சாளராக நான் மூன்று மாதங்களாக இதனைக் குறிப்பிட்டேன். ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். அதற்குப் பொருத்தமானவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.