சென்னை: தமிழ்நாடு அரசு உரிமைத்தொகை கோரி, மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதை வரும் 15ந்தேதி (ஜுலை) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அத்துடன் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். ஜூலை 15ந்தேதி கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் அன்று திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். […]