ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 4.1 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் இன்று மதியம் 12.26 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருக்கிறது. நிலநடுக்கம் லேசாக பதிவாகியிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
Source Link