50MP கேமிரா கொண்ட OPPO Reno 12 Pro… விலை, சலுகை… பிற விபரங்கள்..!!

Oppo Reno 12 5G தொடர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. OPPO Reno 12 5G மற்றும் OPPO Reno 12 Pro 5G ஆகிய இரண்டு சூப்பர் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. ஸ்டைலான தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த மொபைல்கள் OPPO AI தொழில்நுட்ப ஆற்றலையும் கொண்டுள்ளன. 

Oppo Reno 12 Pro விலை, அம்சங்கள் பற்றிய தகவல்கள்

OPPO Reno 12 Pro விலை

12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பகம் கொண்ட மாடலின் விலை ரூ.36,999
12ஜிபி ரேம் + 512ஜிபி சேமிப்பகம் கொண்ட மாடலின் விலை ரூ.40,999

Oppo Reno 12 Pro 5G போன் 12 GB RAM கொண்டது. இதன் 256 GB சேமிப்பகம் கொண்ட மாடலின் விலை ரூ.36,999 மற்றும் 512 GB சேமிப்பகம் மாடலின் விலை ரூ.40,999. இந்த Oppo மொபைல் Sunset Gold மற்றும் Space Brown அகிய நிறங்களில் கிடைக்கும். இதனை வாங்குவதற்கு 4000 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை பெறலாம். மேலும், பேங்க் கிரெடிட் கார்டுகளில் வாங்கும் போது, 9 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ கடன் வசதியும் கிடைக்கும்.

OPPO Reno 12 Pro வடிவமைப்பு

டிஸ்ப்ளே: 6.7″ FullHD + AMOLED வளைந்த காட்சிஅமைப்பு

செயலி: மீடியாடெக் டைமன்சிட்டி 7300-ஆற்றல் (4nm)

2.5GHz ஆக்டா கோர் செயலி

நினைவகம்

12ஜிபி LPDDRX ரேம்
512GB UFS 3.1 சேமிப்பு
12 ஜிபி விர்ச்சுவல் ரேம்

Oppo Reno 12 Pro 5G போன் 12 GB RAM கொண்டது. இந்த மொபைலில் 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது. இது போனின் பிசிகல் RAM உடன் சேர்ந்து 24 ஜிபி ரேமின் ஆற்றலை வழங்குகிறது. தொலைபேசியில் 512 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 1 டிபி மெமரி கார்டு ஆதரவு உள்ளது. Reno12 Pro LPDDR4X RAM + UFS 3.1 சேமிப்பக தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.

ஆபரேட்டிங் சிஸ்டம்

Oppo Reno 12 Pro ஸ்மார்ட்போன் ColorOS 14.1 உடன் இணைந்து செயல்படும் Android 14 ஆபரேடிவ் சிஸ்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் தனது புதிய மொபைலை 3 வருட OS அப்டேட் உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஸ்மார்ட்போனில் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளும் வழங்கப்படுகின்றன.

முன் கேமரா

50MP Samsung S5KZN5 செல்ஃபி சென்சார் கொண்டது. Oppo Reno 12 Pro 50MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சாம்சங் S5KJN5 சென்சார் ஆகும். இந்த Oppo மொபைலில், 0.64μm பிக்சல் அளவுள்ள லென்ஸ் செல்ஃபி எடுக்கவும், வீடியோ காலிங் மற்றும் ரீல்களை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

பின் கேமரா

50MP Sony LYT600 முதன்மை சென்சார்
50MP சாம்சங் S5KZN5 டெலிஃபோட்டோ லென்ஸ்
8MP சோனி IMX355 அல்ட்ரா வைட் கேமரா

OPPO Reno 12 Pro மூன்று பின்புற கேமராவை சப்போர்ட் செகிறது. அதன் பின் பேனலில், F/1.8 துளையுடன் கூடிய 50MP Sony LYT600 முதன்மை சென்சார் உள்ளது. இது 50MP Samsung S5KJN5 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP IMX355 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கேமரா அமைப்பு OIS மற்றும் 2X ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

பேட்டரி திறன்

OPPO Reno12 Pro ஸ்மார்ட்போன் பவர் பேக்கப்பிற்காக 5,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அதிக திறன் கொண்ட பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, நிறுவனம் தனது புதிய மொபைல் போனை 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த ‘ரெனோ’ போனிலும் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரியை விட அதிக பேக்அப் வழங்கும் திறன் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.