மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மண்புராதன இடமாக ஒல்லாந்தர் கோட்டை காணப்படுவதனால் இக்கோட்டையை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
கோட்டை வளாகத்தில் புராதன நூதனசாலை ஒன்றை அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கல், பாரம்பரிய கலை, கலாசார விடயங்களை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான செயற்திட்டங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் துறைசார் நிபுணர்கள் நிகழ்நிலையயூடாகக் கலந்து கொண்டு தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.