போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு புகையிரத நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன புகையிரத நிலைய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், புகையிரத நிலையத்தின் நிலவும் குறைபாடுகளை பார்வையிட்டதுடன், அவற்றினை நிவர்த்திப்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த விஜயத்தின் போது கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உட்பட அமைச்சரின் பணிக்குளாத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.