AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்… அமேசானில் தள்ளுபடி… 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!

சிறந்த தோற்றமும் சிறந்த டிஸ்ப்ளேயும் கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். AMOLED பேனல்கள் பொதுவாக LCD பேனல்களை விட சிறந்த டிஸ்ப்ளே கொண்டவை. இருப்பினும், AMOLED திரைகள் கொண்ட போன்கள் விலை அதிகம். எனினும், அமேசான் தளத்தில் மலிவு விலை கொண்ட,  நடுத்தர பிரிவில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். 15,000 ரூபாய்க்குள் AMOLED திரையுடன் நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த விபரங்களை இங்கே காணலாம்.

Samsung Galaxy M15 5G

சாம்சங் கேலக்ஸி  M15 5G அமேசானில் ரூ.12,999 விலையில் கிடைக்கிறது. மேலும், இதனை வாங்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.1,000 வரை வங்கி தள்ளுபடியை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீத ஆதரவுடன் 6.5 அங்குல SuperAMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 50MP மெயின் லென்ஸ், 5MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ யூனிட் கொண்ட டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இதில் 13எம்பி செல்பி ஸ்னாப்பர் உள்ளது. Android 14 OS ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட இந்த போன், டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படும் இதில், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி உள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை உள்ளக சேமிப்பு உள்ளது. 

Realme Narzo 70 5G

அமேசானில் ரியல்மீ நர்ஸோ 70 5G போன் விலை ரூ.15,999 என்ற அளவில் உள்ளது.  மேலும், இதற்கு ரூ.2,000 கூப்பன் தள்ளுபடியும் கிடைக்கும் எனவே இதன் விலை ரூ.13,999. ஸ்மார்ட்போனில் 6.67அங்குல AMOLED டிஸ்ப்ளே FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீத ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் 50MP முதன்மை கேமிரா லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ யூனிட்டுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 16எம்பி செல்பி ஸ்னாப்பர் உள்ளது.   Android 14 OS ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் இதில் Dimensity 6100+ சிப்செட்  உள்ளது. இதில், 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  வசதி உள்ளது. இ மேலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 

Tecno Camon 20 4G (ஆர்ட் எடிஷன்)

AMOLED திரைகள் கொண்ட மலிவான போன்களில் ஒன்றான டெக்னோவின் கேமன் 20 4ஜி போனின் விலை ரூ. 12,999. மேலும், இதற்கு ரூ. 2,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கும். இது ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்குகிறது. 6.67-இன்ச் FHD+ திரையைக் கொண்டுள்ளது. இதில் 64எம்பி முதன்மை கேமிரா லென்ஸ் உள்ளது. ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  4ஜி போன் என்பதால் 5ஜி சிம் கார்டை இதில் பயன்படுத்த முடியாது. பேட்டரியைப் பொறுத்தவரை, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.