ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்

Sourav Ganguly News Tamil : டி20 உலகக்கோப்பை 2024 சாம்பியன் பட்டத்தை வென்றதும் கேப்டன் ரோகித் சர்மாவை பாராட்டு எல்லோரும், அவரை இந்திய அணயின் கேப்டனாக நியமித்தபோது தன்னை திட்டியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவராகவும் இருந்த சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்ததே நான் என்பதை பலரும் இப்போது மறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் பிசிசிஐ தலைவராக இருந்தபோது, ரோகித் சர்மாவிடம் இருக்கும் கேப்டன்சி திறமையை பார்த்தாகவும், அவரைப் பற்றி தெரிந்து வைத்திருந்ததால் தான் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியதாகவும் கங்குலி கூறியுள்ளார். 

ஆனால் அவரை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அப்போது பலரும் தன்னை கடுமையாக விமர்சித்ததாக கூறியிருக்கும் தாதா கங்குலி, இப்போதை அந்த விமர்சனங்களுக்கு பதில் கிடைத்திருப்பதாகவும், விமர்சகர்கள் அந்த விமர்சனத்தை மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து தான் நீக்கவில்லை என்று கூறியிருக்கும் அவர், அவராகவே 20 ஓவர் இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக பிசிசிஐக்கு தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார். ஒயிட்பால் பார்மேட்டில் இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது, ஒரே ஒருவர் தான் கேப்டனாக இருக்க முடியும், அதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று விராட் கோலியிடம் தெரிவித்ததாகவும், அதன்பிறகே அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்ததாக கங்குலி கூறியுள்ளார்.

விராட் கோலி கூறிய பிறகே இந்திய அணிக்காக ரோகித் சர்மாவை கேப்டனாக்கும் முடிவுக்கு வந்ததாகவும், ஆனால் பலரும் நான் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். நான் பிசிசிஐ தலைவராக இருந்தபோதும் நியமிக்கப்பட்ட கேப்டன் தலைமையில் இப்போது இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் தோல்வியை தழுவியது. அதனால், விராட் கோலியின் கேப்டன்சி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்போது பல சர்ச்சைகள் எழுந்தன. விராட் கோலியே சில முறை கேப்டன்சி தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.