ஸ்ரீநகர்,
பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு சிறிது கூட இடம் கிடையாது என மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“இது பிரதமர் மோடியின் இந்தியா. இங்கு பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள், அல்லது மண்ணில் 7 அடிக்கு கீழ் புதைக்கப்படுவார்கள். பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு சிறிது கூட இடம் கிடையாது. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளும் தன்மை இந்தியாவிற்கு தற்போது இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :