லண்டன்,
கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 7 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-2,6-2,7(7)-6(4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.இதனால் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
Related Tags :